Address: No.10, 1st Street, vallalar nagar, pattabiram, Chennai 600072 |
விடுநர்: K. சுரேஷ்பாபு
No.10, முதல் தெரு, வள்ளலார் நகர், பட்டாபிராம் சென்னை 72
பெறுநர்: உயர் திரு. மாநகராட்சி ஆணையர் அவர்களுக்கு.
ஆவடி சென்னை.
ஐயா,
வணக்கம், நான் மேற்கண்ட விலாசத்தில் வசித்து வருகிறேன் வள்ளலார் நகர் முதல் தெருவில் (தெற்கு) பக்கமாக ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்டுள்ள பொது வழி உள்ளது இந்த வழியில் திரு. ஜெயசீலன் S/o வேதாசலம் அவர்கள் ஏப்ரல் 2018ல் தன்னுடைய இடமென்று ரோட்டில் மதில் சுவர் எழுப்பி ஆக்கிரமிப்பு செய்தார்.இதே ஆவடி மாநகராட்சிக்கு தெரியப்படுத்தினோம் அப்பொழுது நகர நில வரி சார் ஆய்வாளர் அவர்களால் இது தெரு தான் என்பதற்கு சான்று மற்றும் நகர வரைபடம் கொடுத்துள்ளார் இதன் அடிப்படையில் ஆவடி மாநகராட்சி ஆணையர் திரு.M.ஜோதிகுமார் அவர்களின் உத்தரவின் பேரில் 26/3/2019 காலை 10 மணி அளவில் நகராட்சி பணியாளர்களைக் கொண்டு ஆக்கிரமிப்பு செய்த மதில் சுவரை அகற்றினார்கள், இப்பொழுது திரு. ஜெயசீலன் அவர்கள் அதே இடத்தில் ரோட்டின் நடுவில் ஒரு இரும்பு கம்பத்தில் ஆன போர்டை வைத்து இந்த இடம் தனியாருக்கு சொந்தமான இடம் உரிமையாளர் திரு.V. ஜெயசீலன் இந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது அத்துமீறி பிரவேசிப்பவர்கள் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இப்படிக்கு V. ஜெயசீலன் என்று எழுதி உள்ளது வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் பட்சத்தில் இந்த இடத்தின் உரிமையாளர் V. ஜெயசீலன் என்று இருப்பதால் இந்த பொது வழியில் நாங்கள் பயன்படுத்தும் பட்சத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது ஆகையால் உயர் திரு.ஆணையர் அவர்களின் உத்தரவின் படி இந்த போர்டை அகற்றி தரும்படி மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி Was this information helpful? |
Post your Comment