Address: 1,Sri Harihara Krupa,Ellai Amman Koil Street,Srinivasa Nagar,Oragadam,Ambattur |
அம்பத்தூர் ஓரகடம் மக்கள் 08/02/2022
சீனிவாசா நகர்
அம்பத்தூர்
பெறுதல்
2020ம் வருடம் திருமுல்லைவாயில் சரஸ்வதி நகர் பல தெருக்களிலிருந்து மழை நீர் வாய்க்கால் அமைக்கப்பட்டு அம்மன் அவின்யூ தெருமுனையில் முடியுமாறு அமைக்கப்பட்டது. முறையான வடிகால் அமைக்கப்படாமல் இந்தக் கால்வாய் அமைக்கப்பட்டபோதே நாங்கள் திருமுல்லைவாயில் கவுன்ஸிலரிடம் முறையான வடிகால் இல்லாமல் அமைத்தால் தண்ணீர் முழுவதும் வடிவதற்கு பல மாதங்கள் ஆகுமென்றும் பல வீடுகளின் கழிவு நீரும் மழை நீர் வாய்க்காலில் கொண்டு விடுவார்களே என்று கேட்டதற்கு மழைநீர் மட்டுமே வாய்க்காலில் வருமென்று உறுதி கூறினார். ஆனால் கால்வாய் முடிந்து மறுமாதம் முதலே கழிவு நீர் மழைநீர் வாய்க்காலில் வர ஆரம்பித்தது. ஒரு சிமெண்ட் சாலை வழியாக மறுபுறம் வந்து அம்பத்தூர் ஓரகடம் சாலைகளில் மழைநீரும் கழிவு நீரும் நிற்க ஆரம்பித்தது. நாங்கள் பிரதமர் குறைகள் பகுதியிலும் தமிழக முதலமைச்சர் பகுதியிலும் குறைகளை பதிவிட்டோம்.சாலையிலிருந்து நாற்றமடிக்கும் நீர் அம்பத்தூர் ஓரகடம் காலிமனையில் இந்த நீர் வழிந்து தேங்க ஆரம்பித்தது. வீடுகளின் அருகே நாற்றமடிக்க ஆரம்பித்தது. புழல் ஏரி நிரம்பி மிகுதி நீரும் இந்தக் காலிமனைகளில் வர ஆரம்பித்தது. கழிவு நீர் புழல் ஏரி தண்ணீரோடு கலந்து கொசு மற்றும் வண்டுகள் பெருக ஆரம்பித்தது.
அப்போதே நாங்கள் குறைகள் பகுதியில் பதிவிட்டோம் . 2021 மார்ச் மாதம் அடைப்பு இருந்ததால் ஆவடி மாநகராட்சி ஆட்கள் அடைப்பை எடுத்ததால் பெரும்பகுதி நீர் அம்பத்தூர் ஓரகடம் சாலையில் தேங்கி நின்றது. அப்போது நாங்கள் கவுன்ஸிலர் பலாராமனிடமும். ஆவடி Assitant Engineer சங்கரிடமும் முறையிட்டோம். ஆவடி மாநகராட்சி JCB வைத்து அம்மன் அவின்யூ சிமெண்ட் சாலைக்கு கீழேயிருந்த பைப் அடைக்கப்பட்டு மேலும் துர்நாற்றமுள்ள நீர் அம்பத்தூர் ஓரகடம் சாலையில் தேங்காமல் தடுக்கப்பட்டது. ஆனால் சாலையில் நின்ற நீரை அகற்றுவதாகச் சொன்ன ஆவடி நிர்வாகம் அந்த வேலையைச் செய்யவில்லை. சாலையின் பக்கத்தில் உள்ள காலி மனைகளில் படர்தாமரை செடிகள் வளர ஆரம்பித்தது. புழல் நீர் மனைகளில் தேங்கி நின்ற காலத்தில் படர்தாமரைச் செடிகளோ அல்லது வீடுகளில் இவ்வளவு கொசுக்களோ வண்டுகள் மற்றும் அட்டைப் பூச்சிகளோ இருந்ததில்லை.
அம்மன் அவின்யூ தெரு முனையின் எதிர்புறம் கிருஷ்ணா என்பவர் வீடு கட்டி பக்கத்து மனையில் மணல் மற்றும் கற்களை நிரப்பினார். அப்போது கவுன்ஸிலர் பலராமன் சொன்னதின் பேரில் சிமெண்ட் சாலை பைப் அடைப்பு எடுக்கப்பட்டு நாற்றமுள்ள கழிவு நீர் மீண்டும் அம்பத்தூர் ஓரகடம் சாலையில் பெருக்கடித்து ஓடியது. அருகில் இருந்த வீடுகளில் உள்ளே இருந்த பெண்களும் ஆண்களும் நாற்றம் தாங்காமல் வீட்டை விட்டு ஓடிவந்து கிருஷ்ணாவிடம் சண்டை போட்டதால் மீண்டும் பைப் அடைக்கப்பட்டது. பலராமன்தான் இதைச் செய்யச் சொன்னார் என்று பதிவிட்டு முதல்வர் குறைகள் பதிவிட்டேன்.
குறைகள் பதிவிட்டபின் ஒரு எண் வரும்.
அதன் எண்: 2798927 / 29.12.2021
சென்ற வாரம் அம்மன் அவின்யூ மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள கிணறுகள் பாழ்பட்டுப் போவதாகவும் கிணற்று நீரை உபயோகப்படுத்த முடிவதில்லை என்றும் கவுன்ஸிலரிடம் முறையிட்டனர். கவுன்ஸிலர் பைப் அடைப்பை எடுத்து அம்பத்தூர் ஓரகடத்தில் உள்ள காலி மனைகளில் விட்டு விடலாமென யோசனை சொன்னார்.மறுநாளே ஒரு பம்ப் கொண்டுவந்து காலிமனைகளுக்கு நீரைப் பாய்ச்ச முயற்சித்தனர். அந்த காலி மனைகளின் உரிமையாளர்களிடம் எந்த அனுமதியும் பெறவில்லை. மேலும் அந்தக் காலி மனைகளில் புழல் ஏரி மிகுதி நீர் இருநதது. எனவே நாங்கள் அந்த பம்ப் மோட்டாரை இணைக்க அனுமதிக்கவில்லை. மறுநாள் அம்மன் அவின்யூ மக்கள் திரளாக வந்து மழைநீர் கால்வாய் அடைப்பை எடுக்க முயன்றார்கள்.நாங்கள் அதைத் தடுத்ததால் கலவரமாகும் சூழ்நிலை ஏற்பட்டது. எங்கள் வீடருகே இருக்கும் Deputy Inspector of Police அவசர போலிஸை வரவழைத்தார். போலிஸ் அம்மன் அவின்யூ தெரு மக்களிடமும் அம்பத்தூர் ஓரகடம் சீனிவாசா நகர் மக்களிடம் பேசி அந்த பைப்பின் அடைப்பை எடுக்க விடாமல் தடுத்தனர். அதற்காக வந்த JCBயையும் திருப்பி அனுப்பினர்.
அன்று மதியம் ஆவடி Assistant Engineer ஒருவர் (மொபைல் எண்[protected] வந்து எல்லோர் வீட்டு வாசலில் கழிவுத் தண்ணீர் நிற்கிறது. அம்மன் அவின்யூ பகுதியில் தேங்கி நிற்கும் நீர் அம்பத்தூர் ஓரகடம் சாலை தாண்டி பைப் பதித்து துர்நாற்றமடிக்கும் கழிவு நீரை காலி மனையில் விடலாமெனவும் சொன்னார். பட்டா பெற்றவரின் மனையில் கழிவு நீரை அவரின் அனுமதி பெறாமல் திறந்து விடுவது தவறு. மேலும் காலிமனைகளில் புழல் ஏரி திறந்து விடப்பட்டு மிகுதி நீர் தேங்கி நிற்கிறது. அந்த நீரோடு கழிவு நீர் கலக்கும் பட்சத்தில் புழல் நீர் மாசடையும் என்று சீனிவாசா நகர் பகுதி மக்கள் சொன்னதற்கு அந்த AEயும் அம்மன் அவின்யூ மக்களும் சேர்ந்து இதனால் புழல் நீர் பாழாகாது என்று சொல்லி வாயை அடைத்து விட்டனர். மறுநாளே மூன்று பெரிய சிமெண்ட் பைப்களை வீட்டு வாசலில் கொண்டு இறக்கி விட்டனர். மேலும் JCB கொண்டு வந்து காலி மனையில் முன் பகுதியில் பள்ளம் நோண்ட முயற்சித்தனர்.பள்ளம் நோண்டியதும் புழல் ஏரி தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்தது. அந்த வேலையை உடனே கைவிட்டு திரும்பி விட்டனர். மறுநாள் ஆட்களை வைத்து மணல் மற்றும் ஜல்லி கொண்டு வந்து பள்ளம் தோண்டி பைப்களை பதித்து கழிவு நீரை பட்டா பெற்றவரின் மனைகளில் கொண்டு விடுவோம் என்று சொல்லிச் சென்றனர். அம்மன் அவின்யூ மக்களும் நாங்கள் சொன்னதை செய்து காட்டுவோம். உங்களால் என்ன செய்ய முடீயும் என்று ஏளனமாகப் பேசிச் சிரித்தனர். பிரதமருக்கும் முதல்வருக்கும் மனுக்கள் அனுப்பி உங்களால் என்ன சாதிக்க முடிந்தது என்றும் இப்போது பிரதமரும் முதல்வருமா வந்து பார்க்கப் போகின்றனர் என்றும் சொல்லி சொல்லி சிரிக்கின்றனர். முதல் நாள் JCBகொண்டு காலி மனையின் முன்புறம் நோண்டியதால் ஏற்பட்ட பள்ளத்தால் புழல் ஏரி நீரும் திருமுல்லைவாயில் அம்மன் அவின்யூ சாலை சாக்கடை நீர் கலந்த கழிவு நீரும் கலந்து அம்பத்தூர் ஓரகடம் சாலையில் தேங்கி நிற்கிறதை போட்டோவில் காணலாம். . அருகில் உள்ள வீடுகளுக்கு கொசு மாற்றும் வண்டுகள் படையெடுக்கிறது. .சாலையில் உள்ள நீரை எடுக்க மண் மற்றும் கற்கள் கொண்டு வருவதாக சொன்ன AE இப்போது போன் செய்தாலும் போனை எடுப்பதில்லை. ஒரு புறம் சாலைகளில் புழல் நீர். மறுபுறம் துர்நாற்றமடிக்கும் சாக்கடை நீர் என்று துயரத்தோடு நாங்கள் அவதிப்படுகிறோம்.
07ஆம் தேதி இம்மாதம் தினமலரிலும் செய்தியாக வந்துள்ளது. இந்த கழிவு நீரை எந்தப் பகுதிக்கும் பாதிப்பில்லாமல் வேறு வழியாகவோ அல்லது டேங்கர் லாரிகள் மூலமாகவோ எடுத்துச் செல்ல வேண்டுகிறோம். இந்தச் சாக்கடை கழிவு நீர் வருவதற்கு முன் புழல் ஏரி நீர் மனைகளில் நின்றபோது ஆகாய தாமரைச் செடிகள் முளைத்ததில்லை. சாக்கடை நீர் எப்போது புழல் ஏரி மிகுதி நீரில் கலக்க ஆரம்பித்ததோ அப்போதிலிருந்துதான் அம்பத்தூர் ஓரகடம் கிணறுகளின் நிறமும் மாற ஆரம்பீபித்தது. கொசு மற்றும் வண்டு அட்டைப் பூச்சிகளும் நிறைய வர ஆரம்பித்தன.
எனவே பைப்கள் வைத்து சாக்கடை நீரை காலிமனைகளில் அம்பத்தூர் ஓரகடம் பகுதிகளில் விட வேண்டாம் என சிரம் தாழ்த்தி அம்பத்தூர் ஓரகடம் மக்கள் வேண்டிக் கொள்கிறார்கள்.07.02.2022 தேதியிட்ட தினமலரில் இது பற்றி விரிவான செய்தி வந்துள்ளது.
இப்படிக்கு அம்பத்தூர் ஓரகடம் சீனிவாசா நகர் மக்கள் Was this information helpful? |
Post your Comment