Address: Southachampatti, 627951 |
திருநெல்வேலி மாவட்டம் மானூர் கூட்டுக் குடிநீர் மற்றும் கடையநல்லூர் கூட்டு குடிநீர் திட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் ஆகிய நாங்கள் அளிக்கும் மனு.
ஒப்பந்த பணியாளர்களாகிய நாங்கள் மானூர் கூட்டு குடிநீர் திட்டம் 185 கூட்டு குடிநீர் திட்டம் கடையநல்லூர் கூட்டு குடிநீர் திட்டத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் pump ஆபரேட்டர் valve ஆபரேட்டர் எலக்ட்ரீசியன் போன்ற பணிகளை செய்து வருகிறோம். ஒரு மோட்டார் ரூமில் இரு நபர்கள் என 12 மணி நேர ஷிப்ட் அடிப்படையில் பகலில் ஒருவர் இரவில் ஒருவர் என 250 ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு மாத ஊதியமாக ரூபாய் 4000 முதல் 6000 வரை மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால் அரசு எங்களுக்கு அளித்துள்ள ஒப்பந்த அறிக்கையில் கூடுதலாக ஊதியம் கொடுக்க தெரிவித்துள்ளது. ஆனால் ஒப்பந்தம் எடுத்துள்ள ஒப்பந்தபுள்ளி தாரர்கள் எங்களுக்கு அளிக்க வேண்டிய முறையான ஊதியத்தை எங்களுக்கு அளிக்காமல் எங்களை கொத்தடிமைகளாக பயன்படுத்தி வருகின்றனர். மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் டிஜிட்டல் இந்தியா போன்ற நாட்டிற்கு முன்னோடி திட்டங்களை கொண்டு வரும் இதே நாட்டில் இன்னும் எங்களது வங்கி கணக்கில் எங்களது ஊதியத்தை வழங்காமல் கொத்தடிமைகள் போல எங்களிடம் எவ்வித கையொப்பமும் பெறாமல் ஊதியத்தை கையில் கொடுத்து வருகின்றனர். எங்களது உழைப்பு ஒப்பந்ததாரர்கள் சுரண்டப்படுகிறது. ஆகவே மதிப்பிற்குரிய திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் எங்களது 250 குடும்பங்களின் கண்ணீர் கோரிக்கைகளை ஏற்று எங்களது ஊதியத்தினை பாரத பிரதமரின் டிஜிட்டல் இந்தியா முன்னெடுப்பில் கூறியவாறு முறையாக வங்கி பரிவர்த்தனை மூலம் எங்களது ஊதியத்தினை எங்களது வங்கி கணக்கில் வழங்கிட கண்ணீருடன் மல்கி வேண்டுகிறேன்...
எங்களது கோரிக்கை மிகவும் எளிமையானது. நாங்கள் தற்போது இவ்வித ஊதிய உயர்வு கோரி மனு அளிக்க வில்லை. எங்களது உழைப்பு சுரண்டப்படாமல் இருக்க எங்களது ஊதியத்தினை எங்களது வங்கி கணக்கில் அளித்திட ஆவன செய்யுங்கள்... இப்படிக்கு _செ. சிங்கப்புலிபாண்டியன்.. மானூர் கூட்டு குடிநீர் திட்டம், தெற்குஅச்சம்பட்டி நீர் நிலைய பம்ப் ஆப்பரேட்டர்... Was this information helpful? |
Post your Comment