ஐயா வணக்கம்,
நான் வழுதலங்குணம் கிராமம், கீழ்பென்னாத்தூர் வட்டம், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவன். எனது கிராமத்தில் 3 ஏரிகளும் மற்றும் 2 குளங்களும் முக்கிய நீர் ஆதாரங்களாக இருந்து வருகிறது. சில ஆண்டுகளாகவே கோடைக் காலத்தில் இங்கு வறட்சி ஏற்பட்டு பொதுமக்கள் குடிநீருக்காக அலையும் அவல நிலை இருந்து வருகிறது. தற்போது இந்த ஏரிகளில் பலர் ஆக்கிரமிப்பு செய்து வீடுகளைக் கட்டியும், வணிக ரீதியாக பயன்பாடு செய்து வருவது தொடர்கதையாக இருந்து வருவதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலைக்கு மக்கள் தள்ளப்படுகிறார்கள். ஏரி நிலத்தில் பாரத பிரதமர் வீடு திட்டத்தில் அரசு உதவி தொகையைப் பெற்று ஆக்கிரமிப்பு செய்து ஒருவர் வீடு கட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இவரை முன்னுதாரணமாகவும், மேற்கோள்காட்டியும் மேலும் பலரும் வீட்டின் பின்புறம் உள்ள பெரிய ஏரியை ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். இன்னும் சிலர் வீடுகளை கட்ட தயாராகி வருவதாகவும் அறியப்படுகிறது. சமுதாய அக்கறையின் பேரில் ஒரு சமூக ஆர்வலராக அரசின் மேலான கவனத்திற்கு கொண்டு வர விரும்பி இப்பதிவை அளிக்க விரும்புகிறேன். உடனடியாக அரசு தலையிட்டு இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் ஆதாரமாக உள்ள ஏரி, குளங்களை மீட்டு அரசு பராமரிக்க வேண்டி இந்நிகழ்வை தங்கள் பதிப்பில் வெளியிட்டு உதவி செய்ய வேண்டி கேட்டுக்கொள்கிறேன்... Was this information helpful? |
Post your Comment