Address: MD,TASMAC, CHENNAI.8. | Website: tasmacrv2015@gmail.com |
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஐயா அவர்கள்,
தி.மு.க. கட்சியை சேர்ந்த அடிமட்ட தொண்டன் என்ற ஒரே காரணத்துக்காக கடந்த ஆட்சியில் டாஸ்மாக் நிர்வாகத்திலிருந்து முற்றிலும் முகாந்திரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளேன்.
முற்றிலும் சரிவர விசாரணையை மேற்கொள்ளாமல் உடனடியாக பணி நீக்கம் செய்து, அதற்கான நடவடிக்கையை மின்னல் வேகத்தில் செய்ததன் அர்த்தமே நான் ஒரு கேட்க நாதியற்ற தி.மு.க., அடிமட்ட தொண்டன் என்ற ஒரே காரணத்திற்காக மட்டும்தான்.
மீண்டும் பணி வழங்க வேண்டி 30 ஆயிரம் விண்ணப்பங்களுக்கு மேல் சமர்ப்பித்தும் இதுவரை எந்த தரப்பில் இருந்தும், ஒரு பதில் கூட அளிக்கவில்லை. கடந்த 8.11.2023ல் நமது தி.மு.க., அரசின் ஆட்சியை மிகவும் கொச்சையாக பேசிய பலருக்கு மீண்டும் பணி வழங்கி உத்தரவிட்டுள்ளது டாஸ்மாக் மேலாண்மை நிர்வாகம். (வீடியோ இணைப்பு கீழே உள்ளது.) ஆனால் தி.மு.க., தொண்டன் என்ற ஒரே காரணத்திற்காக ரூ.3 லட்சம் லஞ்சத்தை எதிர்பார்த்து நாயை விட கேவலமாக நடத்தும் இவர்களின் போக்கை தடுத்து நிறுத்தி உடனடியாக பணியாணை வழங்க ஆணையிடுமாறு முதலமைச்சர் ஐயா அவர்களை தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.
Was this information helpful? |
Post your Comment