Address: chidambaram 608001 | Website: nil |
நான் 27/04/2024 IRCTC UTS Ticketingல் பயன்படுத்தி ரயில் நம்பர் 20691 CDM-TPJ பயணம் செய்தேன். UTS No: XWA0DS6001 அதற்கான ரூபாய் 70 மட்டும் கட்டணம் எடுக்கப்பட்டது. UTS Ticketingல் அப்போது NEXT TRAIN : Trains in Next 4 hrsல் அந்யோதயா ரயில் மட்டும் காண்பிக்கப்பட்டது. எனக்கும் அந்யோதயா ரயில் அதிவிரைவு ரயில் என்று தெரியாது. ஆனால் நான் TRAIN Type optionல் MAIL/EXP பயண கட்டணம் NORMAL BOOKING PAPERLESS பெற்றேன். காலை 6:35 மணியளவில் ரயில் திருச்சிராப்பள்ளி ரயில் நிலைய சந்திப்பில் சென்றது. அங்கிருந்த பெண் ரயில் பயணச்சீட்டு பரிசோதகர் டிகெட் கேட்க நான் எனது UTS Ticketingல் show ticketஐ காண்பிக்க அவர் பார்த்துவிட்டு எனது செல்போனை வாங்கிக் கொண்டு அவர் மற்ற பயணிகளிடம் டிக்கட் பரிசோதனையில் ஈடுப்பட்டார். நான் என்ன காரணம் என்று கேட்க அவர் பதில் அளிக்கவில்லை.
அந்த ரயில் நிலைய பெண் பயண சீட்டு பரிசோதகர் அறைக்கு அழைத்துச் சென்று அமர சொன்னார். நான் எனது கேள்வியை கேட்கும் போது அவர் இது WITHOUT TICKET TRAVEL இல்லை. IRRELAVENT பயணம் என்று கூறி பயணத்திற்கான தண்டனைத் தொகையை கட்ட சொன்னார். மேலும் நான் அவரிடம் கேட்டேன் "மேடம் google searchல் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் என்று தானே உள்ளது நானும் எக்ஸ்ப்ரஸில் பயண கட்டணம் செலுத்தி பயணம் செய்தேன் என்று கூறியதற்கு அவர் இது சூப்பர் பாஸ்ட் ரயில் என்று கூறினார்". என்னிடம் penalty தொகை இல்லை என்று கூறினேன். நான் எனது காரணத்தையும் தெரிவித்தேன். ஆனால் அவர் அதற்கு ஏற்றுக் கொள்ளவில்லை சரி நான் தொகையை செலுத்துகிறேன். ஆனால் என்னிடம் காசு இல்லை. நான் UTS டிஜிட்டல் முறையில் தான் பயணச்சீட்டு பெற்றேன்.டிஜிட்டல் முறையில் penality பணத்தை செலுத்துகிறேன் என்று கூறியதற்கு சர்வரில் பிரச்சனையாக உள்ளது பணம் செலுத்த இயலாது என்று கூறி சென்று விட்டார். பின்பு அங்கிருந்த ஆண் ரயில் பரிசோதகர் நம்பருக்கு அனுப்பச் சொல்லி நான் அந்த நபருக்கு gpay-யில் பணம் அனுப்பினேன் அதற்கு அவர் எனக்கு Penality தொகையை எழுதி ரசீதை தந்தார்.
Was this information helpful? |
Post your Comment